ஒரு சிலரின் எதிர்ப்பினால் தான் பதவி விலகத் தயாராக இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது ஊடகவியலாளர், பதவி விலக உள்ளீர்களா என கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த அமைச்சர், 100, 200 பேர் வந்து ராஜினாமா செய்யச் சொன்னால் அதற்கு நியாயமான காரணம் இருக்க வேண்டும். இந்த விஷயத்தை சிறுமைப்படுத்தக் கூடாது என்பது என் கருத்து’ எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இவ்வாறான விடயங்களின் பின்னால் யாரேனும் இருக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், சதிகார் யார் என்று தெரிந்தால் அவரை கழுத்தை பிடித்து இழுத்து வருவேன். அவர் சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்படுவார். இது தொடர்பாக தேவையான நிறுவனங்கள் மற்றும் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அதை இப்போதைக்கு கூற முடியாது. எனத் தெரிவித்தார்