காலை எல்ல – வெல்லவாய வீதியில் ரக்கிட்டகந்த கோவில் வீதியில் இன்று (18.07) காலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பஸ் சாரதி உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது நிலைமை மோசமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.