ஒவ்வாமை காரணமாக மற்றுமொருவர் உயிரிழப்பு!

கேகாலை வைத்தியசாலையில் ஒவ்வாமை காரணமாக மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேகாலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 10ஆம் திகதி கல்லீரல் பாதிப்பு காரணமாக கேகாலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவருக்கு 13 நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுக்கப்பட்ட நிலையில், 14வது ஆன்டிபயாட்டிக் கொடுத்ததால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு சர்ச்சைக்குரிய ஆன்டிபயாடிக் மருந்தும் கொடுக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும், அன்றைய தினம் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்ட 19 வது நோயாளி அவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக இந்த ஒவ்வாமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் கேகாலை ஆதார வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

Social Share

Leave a Reply