மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் பதுங்கியிருந்த பாதாள உலக உறுப்பினரை கைது செய்யும் நடவடிக்கையின்போது, குறித்த குழுவினருக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (20.07) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.