அரசாங்கம் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகிறது – சரத் பொன்சேக்கா!

நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்து ராஜபக்ஷகள்  செய்த ஊழல், மோசடிகளை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தின் இன்றைய (21.07) அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  சம்பந்தப்பட்ட குழுவில் உள்ளவர்கள் ராஜபக்ஷவிற்கே  விசுவாசமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். 

 தற்போதைய அரசாங்கம் பழைய மோசடி மற்றும் ஊழலை தொடரும் வகையில் செயற்பட்டு வருவதாகவும்,  அமைச்சர்களும் மக்களை ஏமாற்றும் வகையில் அறிக்கைகளை வெளியிடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply