05 வயதிலேயே சினிமாவில் அறிமுகமான கமல் : பெற்ற சம்பளம் பற்றி தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன், உலக நாயகன் என இரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அவருடைய இந்த பட்டத்திற்கு ஏற்றதுபோலவே தன்னுடைய படங்களிலும் ஏராளமான புதிய விடயங்களை புகுத்தியிருப்பார்.

தனது ஐந்து வயதில்  களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். சிலர் மட்டும்தான் வாழ்வதற்காக தொழில் செய்வார்கள். ஆனால் கமலை பொருத்தவரையில் சினிமா தொழிலுக்காகவே தான் அவர் வாழ்ந்து வருகிறார் என்று சொல்லாம். அந்த அளவிற்கு அர்பணிப்போடு பணியாற்றுவார். அது மாத்திரம் அல்லாமல் கமலுக்கு துணிவும் சற்று அதிகம்தான்.

கமலஹாசனுக்கு இருக்கும் துணிச்சல் மற்றும் தைரியம் எந்த அளவிற்கு என்றால் 5 வயதில் நடித்ததற்கு பிளைமவுத் காரை சம்பளமாக கேட்டிருக்கிறார். குழந்தையாக இருந்து வளர்ந்த கமல் தன்னுடைய 25-வது வயதில் தான் கதாநாயகனாக அபூர்வராகங்கள் படத்தில் என்ட்ரி கொடுத்தார்.

அது மட்டுமல்ல அதன் பிறகு அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுக்கும் போது வெளிநாட்டில் உள்ள யுக்திகளை அதிக அளவு தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். இதற்காக அவர் நான்கு வயதிலிருந்து சம்பாதித்த மொத்தத்தையும் சினிமாவிலேயே முதலீடு செய்த ஒரே நடிகரும் கமலஹாசன் தான்.

அது மட்டுமல்ல இவர் இதுவரை நடித்த எந்த படத்திலும் தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக காட்ட வேண்டும் என பஞ்ச் டயலாக் பேசாதவர். அத்துடன் சமுதாயத்தின் நிறை குறைகளை முன்கூட்டியே தைரியமாக திரையில் கூறுபவர். இவர் இதுவரை சினிமாவில் வந்த எல்லா நடிகர்களை காட்டிலும் கொஞ்சம் வித்தியாசமானவராகவே இருக்கிறார்.

Social Share

Leave a Reply