இலங்கை A அணி மற்றும் பாகிஸ்தான் A அணிகளுக்கிடையிலான ஆசிய வளர்ந்து வரும் அணிகளுக்கியிடலான கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 60 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் A அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 322 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஒமைர் யூசுப் 88 ஓட்டங்களையும், மொஹமட் ஹரிஸ் 52 ஓட்டங்களையும், முபாசிர் கான் 42 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக லஹிரு சமரக்கோன், ப்ரமோட் மதுசான், சாமிக்க கருணாரட்ன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய வேளையில் அவிஷ்க பெர்னாண்டோ, செஹான் ஆராச்சிகே ஆகியோர் இணைந்து ஓட்டங்களை அதிகரித்தனர். 128 ஓட்டங்களை இருவரும் பெற்றுக்கொண்ட வேளையில் 97 ஓட்டங்களோடு அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து போராடிட செஹான் ஆராச்சிஹே 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இலங்கை அணி இறுதியில் 45.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 262 ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஆர்ஷாட் இக்பால் அபாரமாக பந்துவீச்சை 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்தியா A மற்றும் பங்களாதேஷ் A அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறுமணியோடு பாகிஸ்தான் A அணி இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.