நாடு திரும்பினார் ஜனாதிபதி!

இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்து கொண்ட ஜனாதிபதி மற்றும் தூதுக்குழுவினர் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் நேற்று (21.07) இரவு நாடு திரும்பியுள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தில் இணைந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதார பங்காளித்துவத்துவம் மற்றும் மேலும் பல முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடியுள்ளார்.

எதிர்காலத்தில் பல புதிய திட்டங்களை இரு நாடுகளும் இணைந்து முன்னெடுக்கவும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply