தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த தேயிலை தொழிற்சாலை அருகில் உள்ள வடிகால் பகுதியில்தான் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் 52 வயதுடைய வெளிக்கள உத்தியோகத்தரான செமுவேல் வின்சென்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலத்தை அட்டன் நீதிமன்ற நீதிவான் வந்து பார்வை இட்ட பின்னர், கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply