ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இவருடன் இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட 24 அதிகாரிகள் கொண்ட குழுவொன்று இந்த விஜயத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2019ம் ஆண்டுக்குப் பின்னர் ஜப்பானிய அமைச்சர் ஒருவர் இந்நாட்டிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கடன் மறுசீரமைப்புத் திட்டம் குறித்து கலந்துரையாடுவதே இந்த விஜயத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய அரசாங்கப் பிரதிநிதிகளுடன் இலங்கை-ஜப்பான் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.