மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கோமாவில் உள்ளது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் பா.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
மணிப்பூர் கலவரம் குறித்து டுவிட்டரில் அவர் இட்டுள்ள பதிவில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”அறிக்கைகள் உண்மையாக இருந்தால், மணிப்பூரில் கிட்டத்தட்ட இன அழிப்பு நடந்து முடிந்துவிட்டது எனவும், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ஆணை அவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை தாண்டி இயங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு திறமையற்று பக்கச்சார்பாக இயங்குவதாக தெரிவித்த அவர், கேவலமான ஒப்பீடுகளை செய்து திரைக்கு பின்னால் ஒளிந்துக்கொள்வது இரக்கமற்ற செயல் எனவும் விமர்சித்தார்.
மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க அரசு வீழ்ச்சியடைந்து விட்டது எனவும், மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான அரசும் கோமாவில் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.