வீடு கட்டித் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமாக நிதி மோசடி செய்த வழக்குடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று (24.07) நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் நுகேகொட விசேட புலனாய்வுப் பிரிவினருக்கும், மாலபே பொலிஸ் நிலையத்திற்கும் கிடைக்கப்பெற்ற 26 முறைப்பாடுகள் தொடர்பில் மிரிஹான குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மாலபே பிரதேசத்தில் நிறுவனம் ஒன்றை நடத்தி வீடுகளை கட்டி தருவதாக கூறி மக்களிடம் 34,375,000 ரூபா மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.