முட்டை விலை தொடர்பில் புதிய அறிவிப்பு!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் விலை தொடர்பில், வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் ஒவ்வொன்றும் 35 ரூபாவிற்கு விநியோகிக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொதி செய்யப்பட்ட முட்டை பெட்டிகள் தலா ஒரு முட்டைக்கு 40 ருபாய் எனும் கணக்கின் படி விநியோகிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் லங்கா சதொச மற்றும் ஏனைய பல்பொருள் அங்காடிகளுக்கு இன்று (25.07) முதல் விநியோகிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply