மட்டக்களப்பில் பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு முன்னேற்பாடுகள்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் நேற்று (03.08) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பில் பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு முன்னேற்பாடுகள்!

இதன்போது பிரதமர் அலுவலகத்தின் உயர் மட்ட அதிகாரிகள், முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் தனிப்பட்ட செயலாளர் த.தஜீவரன், வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் இணைப்புச் செயலாளர் வை.சந்திர மோகன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பில் பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு முன்னேற்பாடுகள்!

பிரதமரின் வருகையின் போது, மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்காக கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பல்துறை இணைந்த பொறிமுறை தொடர்பான “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி நிகழ்ச்சி குறித்த மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக்கான கலந்துரையாடல் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 04.08.2023 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பில் பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு முன்னேற்பாடுகள்!

Social Share

Leave a Reply