இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகள் இன்று (03.08) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இன்று (03.08) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் வசிப்பவர்கள் மட்டுமே கடவுச்சீட்டுகளை இந்த அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அலுவலகத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து சேவைகளைப் பெறுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்கும் சன நெரிசலைக் குறைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.