நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து!

இலங்கை அரசாங்கம்  இறக்குமதித் தடைகளை நீக்கியதன் மூலம், உருளைக்கிழங்கு மரவள்ளிக்கிழங்கைக் கூட இலங்கைக்குள் இறக்குமதி செய்யும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இலங்கையில் பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையும் எனவும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.  

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். 

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,  ”ஜூலை 19, 2023 அன்று வெளியிடப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான ஒழுங்குமுறையின்படி, 240 வகையான பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இவற்றில் உள்ளுரில் இலகுவாக கிடைக்கக்கூடிய பொருட்களும் அடங்கும். இதனால் உள்ளுர் உற்பத்தி பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில்  மீண்டும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து , வங்கிக் கடனை திருப்பி செலுத்ததாதவர்கள் அதிகரிக்கும் நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டிய அவர், மோசமான கடன்களின் ஆபத்து அதிகரித்து, கடினமாக இயங்கும் வங்கி அமைப்பை பாதிக்கிறது எனவும் கூறினார். 

 இரண்டாவதாக டொலர் மீண்டும் உயரும் எனவும் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 285 ரூபாவாக  ஆக சரிந்த டொலர், மீண்டும் 325  ரூபாவாக ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரித்து வருகிறது.

 இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு டொலர் மதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியது. கடன்களை கொடுக்கும்போது டொலரின் பெறுமதி 370 ரூபாவாக உயரும்” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply