சுற்றாடல்துறை அமைச்சர் நசீர் அஹமட்டிடம் 25 கோடி ரூபா (250 மில்லியன்) நட்டஈடு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது சட்டத்தரணி ஊடாக நோட்டிஸ் அனுபியுள்ளார்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடந்த மாதம் 11ம் திகதி இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் நசீர் அஹமட், தம்மீது பொய்யான கருத்துக்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தாக தெரிவித்துள்ள ஆளுநர் செந்தில் தொண்டமான், குறித்த குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக இவ்வாறு தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.
குறித்த கோரிக்கை கடிதம் கிடைக்கப் பெற்று 14 நாட்களுக்குள் 25 கோடி ரூபா தொகையை நட்ட ஈடாக அவர் வழங்கவேண்டும் எனவும் ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தாம் கோரிக்கை விடுத்துள்ள நட்டஈட்டு தொகையை வழங்காவிடில் அமைச்சர் நசீர் அஹமட் மீது தாம் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கஉள்ளதாகவும் ஆளுநர் செந்தில் தொண்டமான் எச்சரிகை விடுத்துள்ளார்.
அமைச்சர் நசீர் அஹமட் வழங்கும் நட்டஈட்டுத் தொகை கிழக்கு மாகாணத்தில் உள்ள 10 முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் எனவும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.