நீண்டதூர தாக்குதல் ஏவுகணைகளை கேட்கும் உக்ரைன்!

நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய டார்ஸ் மற்றும் ATACMS ஏவுகணைகளை ஜேர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வழங்க வேண்டும் என உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது. 

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வாரி வழங்கி வருகின்றனர்.  

ஆனால் நீண்ட தூர தாக்குதல் ஏவுகணைகள் மட்டும் வழங்கப்படுவதில்லை. காரணம் அந்த ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரைன் தாக்குதல் நடத்தினால் உலகப் போர் ஆரம்பமாக வழிவகுக்கும். ஆகவே நீண்டதூர ஏவுகணைகளை வழங்க தயக்கம் காட்டுகின்றன. 

இருப்பினும் உக்ரைன் குறித்த ஏவுகணைகளை கேட்டு நிற்கிறது. இதற்கிடையே உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதன் மூலம் மேற்கத்தேய நாடுகள் மறைமுகமாக போரில் பங்கேற்பதாக ரஷ்யா விமர்சித்துள்ளது.

Social Share

Leave a Reply