சர்வதேச நாணய நிதியத்துடனான மீளாய்வு கூட்டத்தை செப்டெம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த மீளாய்வின் பின்னர் இரண்டாவது கடன் தவணையை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“IMF உடனான இந்த மீளாய்வு கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.