2023 ரக்பி உலகக் கிண்ண போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த போட்டிகள் பிரான்ஸில் நடைபெறவுள்ளது.
நான்கு பிரிவுகளின் கீழ் இருபது அணிகள் இச்சுற்றுப்போட்டியில் மோதவுள்ளதுடன், இறுதிப் போட்டி ஒக்டோபர் 28ம் திகதி நடைபெறவுள்ளது.
பாரிஸ், மார்சேய், லியோன், போர்டாக்ஸ், லில்லி, செயிண்ட் எட்டியென், நாண்டஸ் மற்றும் துலூஸ் நகரங்களில் போட்டிகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.