காட்டுத் தீயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹவாய் தீவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹவாய் தீவுகள் மீது ஜனாதிபதி ஜோ பைடன் சரியான கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அவரது இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
ஹவாயில் காட்டுத் தீயில் சிக்கி 101 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 1300 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.