தளபதிக்கு வில்லனாகிறார் தல தோணி?

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் ‘தளபதி 68’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை கல்பாத்தி எஸ். அகோரம் நிறுவனம் தயாரிக்கவுள்ளதுடன், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதே தளபதி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்டபடுத்தியுள்ள நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

இப்படத்தின் வில்லன் குறித்து வெளியாகியுள்ள தகவல்களில், நட்சத்திர கிரிக்கெட் வீரர் தல தோனியின் பெயரும் இடம்பிடித்துள்ளது.

தற்போது ‘தளபதி 68’ திரைப்படத்தில் வில்லனாக கிரிக்கெட் வீரர் தோனி நடிக்கவுள்ளார் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ள தோனி, தமது நிறுவனத்தின் முதல் திரைப்படமாக தமிழில் LGM திரைப்படத்தை தயாரித்து வெளியிட்இருந்தார்.

பல கோடி ரசிகர்களை கொண்ட தோணி, தமிழ் திரையுலகில் நடிகராக, அதுவும் தளபதியுடன் நடிக்கவுள்ளார் எனும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் ரெட்படுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply