வாகனங்களுக்கான வருமான உரிமங்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் 01ம் திகதி முதல் மத்திய மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய மாகாண போக்குவரத்து ஆணையாளர் பாரமி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஏனைய மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கணனி செயலி ஊடாக முழு இலங்கையின் வருமான உரிமங்களும் மத்திய மாகாணத்துடன் இணைக்கப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனம் முதலில் பதிவு செய்யப்பட்ட மாகாணத்தின் பிரதேச செயலகத்திலிருந்தே வருமான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனும் தற்போதைய திட்டத்தை இதன் மூலம் மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply