இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ல்ஸ் ஆகியோருக்கிடையில் இன்று (23.08) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பலாலி விமான நிலையம் வழியாக யாழ்ப்பாணத்தை சென்றடைந்த, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து அவருடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளன.
அத்துடன், வட மாகாணத்தில் உள்ள மேலும் பல பிரமுகர்களையும் அமெரிக்க தூதுவர் ஜுலி சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபாவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.