வட மாகாணத்தை சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று நேற்று இந்திய உயர்ஸ்தாணிகரலாயத்தில் நடைபெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் மற்றும் வடமாகாண சபையின் முன்நாள் மீன்பிடித்துறை அமைச்சர் சுகிர்தன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்தியா மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தல், றோலர் படகு மூலம் மீன்பிடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்தியா மற்றும் தமிழக அரசுகள் நடவடிக்கைள் எடுக்கவில்லை போன்ற விடயங்கள் இந்திய தூதுவருக்கு முன்வைக்கப்பட்டன.
தான் இது தொடர்பாக இந்தியா மற்றும் தமிழக அரசுகளுக்கு உடனடியாக அறிவித்து, இந்த பிரச்சினைக்கான உரிய நடவடிக்கையினை எடுக்க விரைவுபடுத்துமாறு தெரிவிப்பதாகவும் இந்திய உயர்ஸ்தாணிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வை எடுக்க எடுக்க வேண்டும். அதற்கு நீண்ட காலம் தேவைப்படும். ஆனால் தற்காலிக தீர்வு ஒன்றை விரைவாக எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.