மன்னாரில் இன்று (20.09) பெரும்பாலான பகுதிகளுக்கு காலை 09 மணி முதல் மாலை 06.00 மணிவரை நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி முருங்கன் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்,மன்னார் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள், பள்ளிமுனை மற்றும் அதனை அண்டிய பகுதிகள், எழுத்தூர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள், தோட்டவெளி,சிறுத்தோப்பு, எருக்கலம்பிட்டி, வங்காலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள், அடம்பன் மற்றும் அதனை அண்டிய பகுதிகள், திருக்கேதீஸ்வரம் மற்றும் நாகதழ்வு ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசர திருத்த வேலைகள் காரணமாக நீர்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் அதிகார சபை அறிவித்துள்ளது.