மைத்திரிக்கு வழங்கப்பட்ட தடை நீக்கப்பட்டது

முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவவின் விளக்க கடிதத்துக்கு வழங்கயிருந்த தடையை இன்று(26.09) நீதிமன்றம் நீக்கியுள்ளது. அந்தக் கட்சியின் செயாலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு விளக்கம் கோரி கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு நீதிமன்றம் தடை வழங்கியிருந்தது. அந்த தடையையே இன்று நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

உண்மைகளை மறைத்து குறித்த தடையுத்தரவு கோரப்பட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன தனது வழக்கறிஞர் பைசர் முஸ்தபா மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்ததனை தொடர்ந்து கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்துன் விதான இந்த தடை நீக்க உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த தடை நீக்கம் மூலமாக தயாசிறி ஜயசேகரவிடம் விளக்கம் கோரும் கடிதத்துக்கு அவர் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply