பங்களாதேஷிடமிருந்து நன்கொடையாக அத்தியாவசிய மருந்துகள்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் பங்களாதேஷிடமிருந்து 54 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்கள் இலங்கைக்கு நன்கொடையாகப் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் சுகாதார அமைச்சின் பங்களிப்புடன் 58,307 அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் இந்த வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இலங்கையில் நிலவும் மருந்துப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையாக இலங்கையின் சுகாதார அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு பங்களாதேஷ் உடனடியாக பதிலளித்துள்ளது.

புற்றுநோய் மற்றும் சிறுநீரக சிகிச்சைகள் உட்பட அத்தியாவசியமான மருந்துகள் பங்களாதேஷிடமிருந்து நன்கொடையாக வழங்கப்படவுள்ள மருந்துகளில் அடங்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிலவும் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காண பங்களாதேஷ் அரசுடன் மருத்துவப் பொருட்கள் தொடர்பான நீண்டகால புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவும் சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

Social Share

Leave a Reply