வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

ஜின் கங்கை, களு கங்கையின் குடா கங்கை மற்றும் நில்வலா ஆறுகளை அண்டிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் மக்கள் மற்றும் வாகன சாரதிகள் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் இயக்குனர் எஸ்.பி.சி. சுகீஸ்வர
தெரிவித்துள்ளார்.

இடர் முகாமைத்துவ அதிகாரிகளும் இது தொடர்பாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Social Share

Leave a Reply