நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இதுவரை 32 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, கிரியெல்ல, கொடகவெல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண் சரிவு, கனமழை மற்றும் மரங்கள் விழுந்ததால் ஒன்பது வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.