கொவிட் 19 சூழலுக்கு மத்தியில் நாடு திறக்கப்பட்டதன் பின்னர் கடந்த 10 மாதங்களில் இலங்கைக்கு 130 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடு திறக்கப்பட்டதிலிருந்து 70,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரித்து 200,000 சுற்றுலாப் பயணிகள் வரை வருகை தருவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும், அவர்களை வரவேற்க தயாராகவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையினால் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மிக முக்கியமாக பிரான்ஸ் நாட்டவர்களை இலக்கு வைத்து சுற்றுலாத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் பிரசன்ன மேலும் தெரிவித்துள்ளார்.