மாத்தறை – அக்குரஸ்ஸ பிரதான வீதி ஜெயந்தி பாலத்திற்கு அருகில் உள்ள பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், தெற்கு அதிவேக வீதியில் மாத்தறை நோக்கி பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பலடுவ வெளியேறும் வழி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், இலகுரக வாகனங்கள் மாத்தறை நோக்கி பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் மாத்தறை நோக்கி பயணிக்க விரும்பினால் கபுதுவ வெளியேறும் வாயிலில் இருந்து வெளியேறி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கபுதுவ நுழைவு வாயிலில் நுழைந்து கொடகம வெளியேறும் வாயிலில் இருந்து வெளியேறி மாத்தறை நோக்கி பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.