கொழும்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்!

கொழும்பின் 4 பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

நாரஹேன்பிட்டி, கிருலப்பனை, மோதர மற்றும் மட்டக்குளிய ஆகிய பகுதிகளிலேயே டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இப்பிரதேசங்களில் இருந்து நாள்தோறும் சுமார் இரண்டு டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அப்பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply