வவுனியாவில் வாகன விபத்து – இரண்டு கான்ஸ்டபிள்கள் பலி!

வவுனியா, வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (09) இரவு 9.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான டிஃபெண்டர் வாகனத்தின் சாரதியாக இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள், உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, மதுகந்தவில் அமைந்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த இரண்டு கான்ஸ்டபிள்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் குருநாகல் மற்றும் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply