இலங்கை அணிக்கு வெற்றி பெறக்கூடிய ஓட்ட எண்ணிக்கை

பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் எட்டாவது போட்டி இன்று(10.10) ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி குஷல் மென்டிஸ், மற்றும் சதீர சமரவிக்ரம் ஆகியோரின் அபார சதங்கள் மூலமாக வெற்றி பெறக்கூடிய ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுள்ளது. 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுள்ளது.

இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக குஷல் மென்டிஸ், பத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் 102 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். குஷல் மென்டிஸ் வேகமாக தனது மூன்றாவது சதத்தை பூர்த்தி செய்தார். சதீர சமரவிக்ரம தனது ,முதற் சதத்தை பெற்றுக் கொண்டார்.

சதீர, மென்டிஸ் ஆகியோர் மூன்றாவது விக்கெட் இணைப்பட்டமாக 111 ஓட்டங்களை பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டங்கள் அணிக்கு பலமாக அமைந்தன. இலங்கை அணி இன்று அடுத்தடுத்து விக்கெட்களை இழப்பதனை இன்றும் செய்தது. இதன் காரணமாக ஓட்ட எண்ணிக்கை குறைந்து போனது.

பாகிஸ்தான் அணி சார்பாக ஹசன் அலி சிறப்பாக பந்துவீசி 04 விக்கெட்களை கைப்பற்றினார். சகல பந்துவீச்சாளர்களும் ஓட்டங்களை வழங்கினார்கள்.

மஹீஸ் தீக்ஷண அணிக்கு திரும்பியதன் மூலம் இலங்கை அணி மேலும் பலம் பெற்றுள்ளது. இன்று இறுக்கமாக பந்துவீசினால் இலங்கை அணி வெற்றி பெற முடியும்.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
பத்தும் நிஸ்ஸங்கபிடி- ஆஷாட் ஷபீக்ஷதாப் கான்516171
குசல் பெரேராபிடி- முகமட் ரிஸ்வான்ஹசன் அலி000400
குஷல் மென்டிஸ்பிடி- முகமட் ரிஸ்வான்ஹசன் அலி12277146
சதீர சமரவிக்ரமபிடி- முகமட் ரிஸ்வான்ஹசன் அலி10889112
சரித் அசலங்கபிடி-ஹசன் அலி010300
தனஞ்சய டி சில்வாபிடி- ஷஹீன் அப்ரிடிமொஹமட் நவாஸ்253430
தசுன் சாணகபிடி- பபர் அசாம்ஷஹீன் அப்ரிடி121800
டுனித் வெல்லாளகே ஹரிஸ் ரவூப்100810
மஹீஸ் தீக்ஷணBowledஹரிஸ் ரவூப்000100
மதீஷ பத்திரன      
டில்ஷான் மதுஷங்க      
உதிரிகள்  20   
ஓவர்  50விக்கெட்  09மொத்தம்344   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
ஷஹீன் அப்ரிடி09006601
ஹசன் அலி10007104
மொஹமட் நவாஸ்09006201
ஹரிஸ் ரவூப்10006402
ஷதாப் கான்08005501
இப்திகார் அகமட்04002200

அணி விபரம்

பாகிஸ்தான் அணி: பபர் அசாம் (தலைவர்), ஷதாப் கான், ஃபகார் ஷமான், இமாம் உல் ஹக், முகமட் ரிஸ்வான், சவுத் ஷகீல், இப்திகார் அகமட், மொஹமட் நவாஸ், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி.

இலங்கை அணி: தசுன் சாணக (தலைவர்), குஷல் மென்டிஸ், குசல் பெரேரா, பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, டுனித் வெல்லாளகே,மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரன

Social Share

Leave a Reply