இடிமின்னலுடன் கூடிய பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று (10.10) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை, கேகாலை, வவுனியா முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மக்கள் அவதானமாக செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.