ஜாக்சன் அன்தனி என்ற அந்த பெரும் ஆளுமையை இழந்து விட்டோம் – சஜித் பிரேமதாச

எமது நாட்டின் கலைத்துறைக்கு தனித்துவம் வாய்ந்த மகாத்தான சேவையை ஆற்றிய, ஒரு சிறந்த ஆளுமை கொண்ட, யுக புருஷர் என ஜாக்சன் அன்தனி அவர்களை அழைக்கலாம் என்றும், அவரது மறைவு நம் அனைவருக்கும், நாட்டுக்கும் பாரிய இழப்பாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கலைத் துறையில் புதிய படைப்புகள் மற்றும் புதிய பாணியிலான கலை போக்குகளை மிகவும் ஆக்கப்பூர்வமாக உருவாக்குதல் தொடர்பாக நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதை இவருக்கிருந்ததாகவும், எம்மை விட்டுப் பிரிந்த அன்னாரது ஆன்மா நித்திய ஆறுதல் கிடைக்கப்பெற பிரார்த்திப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மறைந்த ஜாக்சன் அன்தனிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று (11.10) அன்னாரது இல்லத்திற்குச் சென்றிருந்த போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

-வலையொளி இணைப்பு-

Social Share

Leave a Reply