தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் லக்னோவில் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டியில் தென்னாபிரிக்கா அணி 134 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அவுஸ்திரேலியா அணி முதல் சுற்றில் இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்திருப்பது இதுவே முதற்தடவையாகும். இந்த தோல்விகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு தெரிவு செய்யும் வாய்ப்பை அவுஸ்திரேலியா அணிக்கு கடினமாக்கியுள்ளது.
312 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 40.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 177 ஓட்டங்களை பெற்றது. அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப விக்கெட்களை தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து சாய்த்தனர். இதன் காரணமாக தடுமாறிய அவுஸ்திரேலியா அணியின் மத்திய விக்கெட்களும் வேகமாக வீழந்தன. கஜிசோ ரபாடா சிறப்பாக பந்துவீசினார்.
அவுஸ்திரேலியா அணி உலகக்கிண்ண வரலாற்றால் பெற்ற மோசமான தோல்வியாக இந்த தோல்வியை கருதலாம்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி கத்தடுப்பை தெரிவு செய்தது. தென்னாபிரிக்கா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குயின்டன் டி கொக் பெற்றுக் கொடுத்த சதம் மூலம் 300 ஓட்டங்களை தாண்டியது. ஆரம்பம் முதலே நல்ல முறையில் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி வெற்றி பெறக்கூடிய ஓட்ட எண்ணிக்கையான 311 ஓட்டங்களை 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து பெற்றுக்கொண்டது.
ரெம்பா பவுமா, குயின்டன் டி கொக் ஜோடி சத இணைப்பாட்டத்தை பெற்றது. அதன் பின்னர் தொடர்ச்சியான சராசரியான இணைப்பாட்டங்கள் பகிரப்பட்டன. எய்டன் மார்க்ராம் அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.
கிளென் மக்ஸ்வெல் சிறப்பாக பந்துவீசி இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். அவுஸ்திரேலியா அணியின் முன்னணி பந்துவீச்சாளர் மிற்செல் ஸ்டார்க் ஓட்டங்களை அதிகம் வழங்கமால் இறுக்கமாக பந்துவீசிய போதும் ஆரம்ப விக்கெட்களை தகர்க்க முடியாமல் போனது.
அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பில் சிறந்த அணி. ஆனாலும் இன்று நான்கு பிடிகளை தவறவிட்டது அவர்களுக்கு பின்னடைவை வழங்கியுள்ளது.
அதிகம் எதிர்பார்க்கப்படாத தென்னாபிரிக்கா அணி மிக அபாரமாக விளையாடி வருகிறது. அவர்கள் இனிதான் கடினமான அணிகளை சந்திக்கப்போகிறார்கள்.
இன்றுடன் முதல் சுற்றின் இரண்டாம் கட்டப் போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன.
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
மிற்செல் மார்ஷ் | பிடி – ரெம்பா பவுமா | மார்கோ ஜனேசன் | 07 | 15 | 0 | 0 |
டேவிட் வோர்னர் | பிடி – ரஷி வன் டேர் டுசென் | லுங்கி நிகிடி | 13 | 27 | 2 | 0 |
ஸ்டீபன் ஸ்மித் | L.B.W | ககிசோ ரபாடா | 19 | 16 | 4 | 0 |
மார்னஸ் லபுஷேன் | பிடி – ரெம்பா பவுமா | கேசவ் மகராஜ் | 46 | 74 | 3 | 0 |
ஜோஷ் இங்லிஷ் | Bowled | ககிசோ ரபாடா | 05 | 04 | 1 | 0 |
க்ளன் மக்ஸ்வெல் | பிடி – கேசவ் மகராஜ் | கேசவ் மகராஜ் | 03 | 17 | 0 | 0 |
மார்க்ஸ் ஸ்ரோய்னிஸ் | பிடி – குயின்டன் டி கொக் | ககிசோ ரபாடா | 05 | 04 | 1 | 0 |
மிட்செல் ஸ்டார்க் | பிடி – குயின்டன் டி கொக் | மார்கோ ஜனேசன் | 27 | 51 | 3 | 0 |
பட் கம்மின்ஸ் | பிடி – டேவிட் மில்லர் | ரப்ரைஸ் ஷம்ஸி | 22 | 21 | 4 | 0 |
அடம் ஷம்பா | 11 | 16 | 1 | 0 | ||
ஜோஸ் ஹெஸல்வூட் | பிடி – ககிசோ ரபாடா | ரப்ரைஸ் ஷம்ஸி | 02 | 02 | 0 | 0 |
உதிரிகள் | 17 | |||||
ஓவர் 40.5 | விக்கெட் 10 | மொத்தம் | 177 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
லுங்கி நிகிடி | 08 | 02 | 18 | 01 |
மார்கோ ஜனேசன் | 07 | 00 | 54 | 02 |
ககிசோ ரபாடா | 08 | 01 | 33 | 03 |
கேசவ் மகராஜ் | 10 | 00 | 30 | 02 |
ரப்ரைஸ் ஷம்ஸி | 7.5 | 00 | 38 | 02 |
வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
குயின்டன் டி கொக் | Bowled | க்ளன் மக்ஸ்வெல் | 109 | 106 | 8 | 5 |
ரெம்பா பவுமா | பிடி – டேவிட் வோர்னர் | க்ளன் மக்ஸ்வெல் | 35 | 55 | 5 | 0 |
ரஷி வன் டேர் டுசென் | பிடி – சீன் அபோட் | அடம் ஷம்பா | 26 | 30 | 2 | 0 |
எய்டன் மார்க்ரம் | பிடி – ஜோஸ் ஹெஸல்வூட் | பட் கம்மின்ஸ் | 56 | 44 | 7 | 1 |
ஹெய்ன்ரிச் கிளாசன் | பிடி – ஜோஸ் இங்கிலிஸ் | ஜோஸ் ஹெஸல்வூட் | 29 | 27 | 3 | 0 |
டேவிட் மில்லர் | Bowled | மிட்செல் ஸ்டார்க் | 17 | 13 | 1 | 1 |
மார்கோ ஜன்சன் | பிடி – டேவிட் வோர்னர் | மிட்செல் ஸ்டார்க் | 26 | 22 | 3 | 1 |
ககிசோ ரபாடா | 00 | 01 | 0 | 0 | ||
கேசவ் மகராஜ் | 00 | 02 | 0 | 0 | ||
உதிரிகள் | 13 | |||||
ஓவர் 50 | விக்கெட் 07 | மொத்தம் | 311 |
பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
மிட்செல் ஸ்டார்க் | 09 | 01 | 53 | 02 |
ஜோஸ் ஹெஸல்வூட் | 09 | 00 | 60 | 01 |
க்ளன் மக்ஸ்வெல் | 10 | 01 | 34 | 02 |
பட் கம்மின்ஸ் | 09 | 00 | 71 | 01 |
அடம் ஷம்பா | 10 | 00 | 70 | 01 |
மிற்செல் மார்ஷ் | 01 | 00 | 06 | 00 |
மார்க்ஸ் ஸ்ரோய்னிஸ் | 02 | 00 | 11 | 00 |
புள்ளிப்பட்டியல்
அணி | போ | வெ | தோ | ச/ கை | பு | ஓட்ட சராசரி வேகம் |
தென்னாபிரிக்கா | 02 | 02 | 00 | 00 | 04 | 2.360 |
நியூசிலாந்து | 02 | 02 | 00 | 00 | 04 | 1.958 |
இந்தியா | 02 | 02 | 00 | 00 | 04 | 1.500 |
பாகிஸ்தான் | 02 | 02 | 00 | 00 | 04 | 0.927 |
இங்கிலாந்து | 02 | 01 | 01 | 00 | 02 | 0.553 |
பங்களாதேஷ் | 02 | 01 | 01 | 00 | 02 | -0.653 |
இலங்கை | 02 | 00 | 02 | 00 | 00 | -1.161 |
நெதர்லாந்து | 02 | 00 | 02 | 00 | 00 | -1.800 |
அவுஸ்திரேலியா | 02 | 00 | 02 | 00 | 00 | -1.846 |
ஆப்கானிஸ்தான் | 02 | 00 | 02 | 00 | 00 | -1.907 |