ஆன்லைனில் வேலை பெற்றுத்தருவதாக கூறி, பலரிடம் பண மோசடி செய்த ஒருவர், கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடி விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபருக்குச் சொந்தமான 3 வங்கிக் கணக்குகளில் 7.2 மில்லியன் ருபாய் பணம் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர் 34 வயதுடைய கரந்தெனிய, தெனகொட பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், நேற்று வெள்ளிக்கிழமை (13.10) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் ஒக்டோபர் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.