தெற்கு அதிவேக நெடுஞ்சாலை தொடர்பில் புதிய அறிவிப்பு!

மூடப்பட்டுள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் இமதுவ ஆகிய பகுதிகளுக்கு இடையில் 2 பாதைகள் திறக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

அண்மைய மோசமான காலநிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் இமதுவ இடையே மண்சரிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக பின்னதுவ மற்றும் இமதுவ ஆகிய பகுதிகள் வாகனப் போக்குவரத்திற்காக மூடப்பட்டதுடன், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையின் பின்னர், கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி செல்லும் அதிவேக நெடுஞ்சாலையின் 02 இடது பாதைகள் மாத்திரம் இரு திசைகளுக்கும் திறக்கப்பட்டுள்ளது.

விரைவில் வீதியை முழுமையாக திறப்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply