மன்னாரில் 17 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது!

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராமம் ஒன்றில் வசித்து வரும் 17 வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
மன்னார் பெரியகமம் பகுதியை சேர்ந்த 23,18, மற்றும் 17 வயதுடைய இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று நபர்களும் கைத்தொலைபேசியில் சிறுமியின் நிர்வாண புகைப்படத்தை வைத்திருந்ததோடு அப் புகைப்படத்தை நண்பர்களுக்கும் பரிமாறியுள்ளமை தெரியவந்துள்ளது.

அந்த புகைப்படங்களை வைத்தே சிறுமியை மிரட்டி துஷ்பிரயோகம் செய்திருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபர் வாகனம் திருத்துமிடம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரின் தாயாரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மன்னார் பொலிஸார் குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்து விசாரணைகளின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிற[இக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply