கொழும்பில் வெள்ளம் ஏற்படுபவதை தடுக்க திட்டம்!

கொழும்பு மாநகர் வெள்ளத்தில் மூழ்குவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான திட்டத்தை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாநகர சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்மையில் கூடிய நாடாளுமன்றத்தின் நடைமுறைகள் தொடர்பான குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கொழும்பு நகரின் பல இடங்கள் நீரில் மூக்குவதாலும், இதனால் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாலும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

நகரவாசிகள் மட்டுமின்றி நகருக்குள் நாள்தோறும் வரும் லட்சக்கணக்கான மக்கள் சந்திக்கும் சிக்கல்களையும் கருத்திற்கொண்டே இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, கொழும்பு நகரில் வெள்ளம் ஏற்படுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்த திட்டத்தை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாநகர சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply