இஸ்ரேலின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற 20 டிரக்குகள் எகிப்து-காசா ரஃபா எல்லை நுழைவாயில் வழியாக காசா பகுதிக்குள் நுழைந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுக்கும் எகிப்திய ஜனாதிபதி அல் சிசிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எகிப்து மூலம் இந்த உதவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
இதேவேளை, ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்காக எகிப்து ஜனாதிபதியின் தலையீட்டில் சர்வதேச மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த போரினால் இதுவரையில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 4,137 ஆக உயர்ந்துள்ளதுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.