பூநகரி பாடசாலைகளில் இடைவிலகலை தடுப்பதற்கான களவிஜயம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சிறுவர்களுடைய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி என்பவற்றை மேம்படுத்தும் நோக்கில் பிரதேச மட்டத்தில் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், பாடசாலை இடைவிலகலை தடுப்பதற்கான இல்லத் தரிசிப்பு நேற்றுமுன்தினம்(19.10) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. குறித்த களவிஜயம் பூநகரி பிரதேசத்திற்கு உட்பட்ட முழங்காவில், கரிகாலை, நாகபடுவான், நாச்சிக்குடா போன்ற பகுதியில் மேற்காெள்ளப்பட்டது.

இதன்போது, மாணவர்களை மீள இணைப்பதற்கும் அதனை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கும் பாடசாலை அதிபர்கள், பொலிஸ் அதிகாரிகள், சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள், பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வருகை தந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இதன் தொடர் நடவடிக்கைகள் ஏனைய கிராமங்களிலும் நடைபெறவுள்ளமை விசேடம்சமாகும்.

Social Share

Leave a Reply