இவ்வருடம் நீர் கட்டணத்தில் எதுவித திருத்தமும் இடம்பெறாது என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் திரு ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இறுதியாக கடந்த ஆகஸ்ட் மாதம் குடிநீர் கட்டணம் திருத்தம் செய்யப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலை இலக்காகக் கொண்டு உத்தேச நீர் கட்டண சூத்திரம் தொடர்பில் சமூகத்தில் பரப்பப்படும் வதந்திகளை வன்மையாக நிராகரிப்பதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.