மலையக ரயில் சேவை வழமைக்கு!

புகையிரதம் தடம் புரண்டமையினால் தடைப்பட்டிருந்த மலையக புகையிரத சேவைகள் இன்று (25.10) காலை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா வரை தலவாக்கலைக்கும் வடகொட புகையிரத நிலையத்திற்கும் இடையில் பயணித்த டிக்கிரி மெனிகே புகையிரதம் நேற்று (24.10) இரவு 9.00 மணியளவில் தடம் புரண்டது.

இந்நிலையில் இன்று காலை முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply