குவைத்தில் நீண்ட காலமாக சட்டவிரோதமாக தங்கியிருந்து, பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 28 பேர் இன்று (27.10) இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு தூதரக அதிகாரிகள் காவல்துறை, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் நீதித்துறையுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.
இந்தக் குழுவினர் இன்று காலை 06:30 மணியளவில் குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை பகுதியில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.