
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் உலககிண்ணத்தொடரின் 29 ஆவது போட்டியாக லக்னோவில் இன்று (29.10) நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இந்தியா அணியின் முதல் விக்கெட் வீழ்ந்தவுடன் அடுத்த 2 விக்கெட்களும் சம இடைவெளிகளில் வீழ்த்தப்பட்டன. 4 விக்கெட் இணைப்பாட்டத்திற்காக ஜோ சேர்ந்த ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் சிறப்பாக துடுப்பாடி 91 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததுடன் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்திக்கொடுத்தனர். லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்ததுடன் மீண்டும் விக்கெட்டுகள் சம இடைவெளிகளில் வீழ்த்தப்பட்டன.
இந்தியா அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 229 ஓட்டங்களை பெற்றது.
இந்தியா அணியின் பந்துவீச்சும் களத்தடுப்பும் சரியாக அமையவில்லை என்றால் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவது இலகுவாகிவிடும்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| ரோஹித் ஷர்மா | பிடி- லியாம் லிவிங்ஸ்டன் | ஆடில் ரஷிட் | 87 | 101 | 10 | 3 |
| சுப்மன் கில் | Boweld | கிறிஸ் வோக்ஸ் | 09 | 13 | 1 | 0 |
| விராத் கோலி | பிடி- பென் ஸ்டோக்ஸ் | டேவிட் வில்லி | 00 | 09 | 0 | 0 |
| ஷ்ரேயாஸ் ஐயர் | பிடி- மார்க் வூட் | கிறிஸ் வோக்ஸ் | 04 | 16 | 0 | 0 |
| லோகேஷ் ராகுல் | பிடி- ஜோனி பார்ஸ்டோவ் | டேவிட் வில்லி | 39 | 58 | 3 | 0 |
| சூர்யகுமார் யாதவ் | பிடி- கிறிஸ் வோக்ஸ் | டேவிட் வில்லி | 49 | 47 | 4 | 1 |
| ரவீந்தர் ஜடேஜா | L.B.W | ஆடில் ரஷிட் | 08 | 13 | 0 | 0 |
| மொஹமட் ஷமி | பிடி- ஜோஸ் பட்லர் | மார்க் வூட் | 01 | 05 | 0 | 0 |
| ஜஸ்பிரிட் பும்ரா | Run Out | 16 | 25 | 1 | 0 | |
| குல்தீப் யாதவ் | 09 | 13 | 1 | 0 | ||
| உதிரிகள் | 07 | |||||
| ஓவர் 50 | விக்கெட் 09 | மொத்தம் | 229 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| டேவிட் வில்லி | 10 | 02 | 45 | 03 |
| கிறிஸ் வோக்ஸ் | 09 | 01 | 33 | 02 |
| ஆடில் ரஷிட் | 10 | 00 | 35 | 02 |
| மார்க் வூட் | 09 | 01 | 46 | 01 |
| லியாம் லிவிங்ஸ்டன் | 04 | 01 | 29 | 00 |
| மொயின் அலி | 08 | 00 | 37 | 00 |
இந்தியா அணி விளையாடிய 5 போட்டிகளிலுமே வெற்றி பெற்று இரண்டாமிடத்திலும் இங்கிலாந்து அணி விளையாடிய 5 போட்டிகளில் 1 வெற்றி 4 தோல்விகள் என்ற நிலையில் இறுதியிடத்திலும் காணப்படுகின்றன.
அணி விபரம்
இந்திய அணி: ரோஹித் ஷர்மா(தலைவர்), சுப்மன் கில், விராத் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்தர் ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் சிராஜ், மொஹமட் ஷமி
இங்கிலாந்து அணி: ஜோஸ் பட்லர் (தலைவர்), ஜோனி பார்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆடில் ரஷிட், ஜோ ரூட், மொயின் அலி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி