அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை திருடும் பலத்தீனர்கள்!

ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தெற்கு மற்றும் மத்திய காஸாவில் மனிதாபிமான உதவிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ள கிடங்குகள் மற்றும் விநியோக மையங்களைத் தாக்கி, கோதுமை மாவு மற்றும் பிற தேவைகளைத் திருடியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது உள்நாட்டு அமைதி சீர்குலைக்கும் அறிகுறி என்றும், இஸ்ரேலியப் படைகளின் கடும் தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கும் பாலஸ்தீனர்கள் அச்சம், விரக்தி மற்றும் அவநம்பிக்கையுடன் இருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு காஸா பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் அதிக எண்ணிக்கையில் தெற்கு காசா பகுதிக்கு வருவதாகவும், இதனால் தெற்கு காசா பகுதியில் பொது சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply