சொத்து உரிமையாளர்களுக்கு புதிய வரி!

2025ஆம் ஆண்டு முதல் பாரிய சொத்துக்களை வைத்திருக்கும் நபர்களுக்கு புதிய வரி அறவிட திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த வரி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிக அளவு சொத்து வைத்திருப்பவர்களிடம் இருந்து வரி வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சில சொத்து உரிமையாளர்களின் சொத்துக்களுக்கு முறையாக கணக்கு வைக்கப்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சுக்கு ஏற்கனவே பல பரிந்துரைகள் கிடைத்துள்ளதாகவும், அந்த முன்மொழிவுகள் தொடர்பில் அமைச்சு அதிக கவனம் செலுத்தியு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply